'நினைச்சத விட சீக்கிரமாவே தடுப்பூசி கிடைக்கலாம்'... 'எகிறும் பாதிப்பால்'... 'எப்டிஏ எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 3ஆம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பே கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்போம் என எப்டிஏ அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கும் தடுப்பூசிக்கு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னரே அங்கீகாரம் அளிக்கப்படும் என அதிபர் டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது அங்கு 3 அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கி உள்ள தடுப்பூசிகள் 3ஆம் கட்ட பரிசோதனையில் உள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவில் 3ஆம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பே கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்போம் என எப்டிஏ அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள மருந்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எப்டிஏ) தலைவர் ஸ்டீபன் ஹன், "தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் 3ஆம் கட்ட பரிசோதனையின் முடிவுக்கு முன்பே அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தால், நாங்கள் வழக்கமான நடைமுறையை விட்டு அங்கீகாரம் அளிப்போம். தற்போதுள்ளது போன்ற பொது சுகாதார அவசரநிலையின்போது ஆபத்தை விட மக்களுக்கு அதிக பயன்கள் இருப்பது தெரியவந்தால், அங்கீகாரம் கொடுப்போம். ஆனால், இந்த முடிவு அறிவியல் மற்றும் மருத்துவம் அடிப்படையிலானதாகவே இருக்கும். அதிபரை திருப்திப்படுத்தும் நோக்கில் இதை செய்வதாக கருத வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்