‘சுயமாக, வீட்டிலேயே கொரோனா பரிசோதனை’... ‘அதுவும் 30 நிமிடகளுக்குள் முடிவுகள்’... ‘முதன் முதலாக அறிமுகப்படுத்தும் நாடு’... 'ஆனாலும் ஒரு கட்டுப்பாடு’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்வீட்டிலேயே சுயமாக கொரோனா பரிசோதனை செய்து, 30 நிமிடங்களுக்குள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் உபகரணத்துக்கு முதன்முதலாக அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில், கொரோனா வைரஸ் அமெரிக்காவை தான் புரட்டி போட்டு வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக இயக்குநர் ஜெஃப் ஷுரேன் கூறும்போது 'லூசிரா ஹெல்த் நிறுவனம் சார்பில் இந்தப் பரிசோதனை உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகிக்கும் நபர்கள் வீட்டிலேயே பரிசோதித்து அதன் முடிவுகளை அறியலாம்.
பதினான்கு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், தாங்களாகவே உமிழ்நீர் மாதிரிகளை எடுத்துப் பரிசோதனை செய்ய முடியும். எனினும் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளே பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம். இந்த உபகரணத்தை மருத்துவமனைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி குறித்து நேர்மறையான முடிவுகள் வந்து கொண்டிருந்தாலும், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சோதனைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன' என்று தெரிவித்துள்ளார். இந்த உபகரணத்தின் விலை குறித்த தகவல்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. ஒரு கிட்டின் விலை 50 டாலர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் அமெரிக்காவில், ஒரு கோடியே 16 லட்சத்து 99 ஆயிரத்து 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 54 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்