'கொரோனா சிகிச்சையில்'... 'அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து!!!'... 'முழு அனுமதி வழங்கிய FDA!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க முழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அதிக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் தற்போது ரெம்டெசிவிர் என்ற வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதலை வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும். கடந்த மே மாதம் இந்த மருந்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்