'அசந்து தூங்கிய கணவன்...' 'மனைவி எடுத்த ஃபோட்டோ...' எல்லாத்துக்கும் தேங்க்ஸ்...' - வைரல் ஃபோட்டோவின் வியக்க வைக்கும் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த தந்தை, மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருக்கிறது.

'அசந்து தூங்கிய கணவன்...' 'மனைவி எடுத்த ஃபோட்டோ...' எல்லாத்துக்கும் தேங்க்ஸ்...' - வைரல் ஃபோட்டோவின் வியக்க வைக்கும் பின்னணி...!

அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள பார்மிங்க்டோன் நகரில் வசிப்பவர் சாரா டங்கன் மற்றும்  ஜோ டங்கன். சாரா டங்கன் ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும், அவரது கணவர் ஜோ டங்கன் சிமெண்ட் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளுடன் உள்ளனர்.

இந்நிலையில் தீடீரென தம்பதியர்களின் இளைய மகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக ஜோ டங்கனிற்கு, சாராவிடமிருந்து ஒரு போன் வந்தது. செய்தியைக் கேட்ட ஜோ டங்கன், நீ தனியாகச் செல்ல வேண்டாம் நானும் வருகிறேன் என்று கூறிவிட்டு, சற்றும் தாமதிக்காமல் பதறியடித்து கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

சமீபக்கலாமாக ஜோ டங்கன் பணிச் சுமை காரணமாக, 12 மணி நேர ஷிப்ட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மகளுக்கு மருத்துவ அவரசம் என்று கேள்விப்பட்டவுடன், உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல், உடனே Refresh ஆகி விட்டு, மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஒரு மணி நேரம் வண்டி ஒட்டிக்கொண்டு சென்றார் ஜோ.

மருத்துவமனை சென்றபின்  ஜோ-சாராவின் மகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் ஜோ, 12 மணி நேரம் வேலைப் பார்த்த கலைப்போடு, மருத்துவமனையின் வளாகத்திலேயே தன் குழந்தையின் பேபி சீட்டின் மேல் தலை வைத்து, மருத்துவமனை தரையிலேயே படுத்து சிறிது நேரம் உறங்கியுள்ளார்.

இந்த நிகழ்வின் புகைப்படத்தை ஜோவின் மனைவி சாரா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும் அதில், 'இந்த வாழ்க்கையை உன்னைத்தவிர நான் வேற யாருடன் வாழ விரும்பவில்லை. காதலான கணவரகவும், அன்பான அப்பாவிற்கும் நன்றி' என காதலோடு உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பலரும் ஜோவை பாராட்டியும், அவரின் தந்தை உணர்வு குறித்தும் புகழ்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்