அங்க ‘ஜெயிச்சா’ வெற்றி கன்பார்ம்னு சொல்லுவாங்க.. ஆனா இந்த தடவை எல்லாமே தலைகீழா நடக்குது..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் யார் என தீர்மானிக்கு ஒரு மாகாணத்தை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.

அங்க ‘ஜெயிச்சா’ வெற்றி கன்பார்ம்னு சொல்லுவாங்க.. ஆனா இந்த தடவை எல்லாமே தலைகீழா நடக்குது..!

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பரபரபாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 தொகுதிகளிலும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 214 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் ஃப்ளோரிடா, ஓஹியோ, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய 6 மாகாணங்கள் இருக்கின்றன. இதில் 29 பிரதிநிதிகளைக் கொண்ட மாகாணமாக ஃப்ளோரிடா திகழ்கிறது.

US Election Results: Donald Trump won the big prize state of Florida

இதனை டிரம்ப் தன்வசப்படுத்தி இருக்கிறார். இங்கு பதிவான வாக்குகளில் டிரம்ப் 51.25 சதவீத வாக்குகளும், ஜோ பைடன் 47.85 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் ஃப்ளோரிடாவின் 29 பிரதிநிதிகளின் ஆதரவு ட்ரம்பிற்கு கிடைத்துள்ளது. இது குடியரசுக் கட்சிக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஃப்ளோரிடா மாகாணத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவரே அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது.

US Election Results: Donald Trump won the big prize state of Florida

குறிப்பாக குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர்கள் அனைவரும் ஃப்ளோரிடாவில் வெற்றி பெற்றே ஆட்சியை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஒவ்வொரு தேர்தலின் போது ஃப்ளோரிடா மாகாணத்தைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவும். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக 1 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார்.

US Election Results: Donald Trump won the big prize state of Florida

அப்படி இருக்கையில் இந்த வருட தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. காரணம் ஃப்ளோரிடாவில் டிரம்ப் வெற்றி பெற்றாலும் 214 தொகுதிகளைதான் கைப்பற்றியுள்ளார். ஆனால் ஜோ பைடன் 264 தொகுதிகளை கைப்பற்றியுள்ளார். அவர் வெற்றி பெற இன்னும் 6 தொகுதிகளே உள்ளன. அதனால் இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது என மக்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாவதற்கு முன்பே, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்