'அந்த நிகழ்ச்சிக்கு அவரும் வந்தாரு, அப்போ'... 'மாடல் நடிகையின் பகீர் புகாரால் பரபரப்பு'... 'தேர்தல் நேரத்தில் அனலை கிளப்பியுள்ள சம்பவம்!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அந்த நிகழ்ச்சிக்கு அவரும் வந்தாரு, அப்போ'... 'மாடல் நடிகையின் பகீர் புகாரால் பரபரப்பு'... 'தேர்தல் நேரத்தில் அனலை கிளப்பியுள்ள சம்பவம்!'...

கடந்த 1997ஆம் ஆண்டு நியூயார்க்கில் டென்னிஸ் தொடர் நடந்தபோது, மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் அதில் கலந்து கொண்டுள்ளார். அதில் முன்னாள் மாடல் நடிகை ஏமி டோரிஸும் கலந்து கொண்டுள்ளார். அப்போது டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

US Election Former Model Accuses Donald Trump Of Sexual Assault

இதுதொடர்பாக கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ள ஏமி, தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக டிரம்ப் தன்னை இறுக அணைத்ததாகவும், முத்தமிட்டதாகவும், அவருடைய பிடியில் இருந்து தான் வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது வைக்கப்பட்டுள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

US Election Former Model Accuses Donald Trump Of Sexual Assault

இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், "தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவிவிட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.  அதிபர் டிரம்ப்க்கு எதிராக இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. இதுவரை 12க்கும் அதிகமான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 23 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மாடல் நடிகை அளித்துள்ள புகார் அந்நாட்டு அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்