‘ட்ரோன் மூலம் தாக்குதல்’!.. ஈரான் முக்கிய தலைவரை கொன்ற அமெரிக்க ராணுவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘ட்ரோன் மூலம் தாக்குதல்’!.. ஈரான் முக்கிய தலைவரை கொன்ற அமெரிக்க ராணுவம்..!

கடந்த 2018-ம் ஆண்டு ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அந்நாடு தீவிரவாத சக்திகளுக்கு உதவுவதாக கூறி அணுசக்தி ஒப்பந்ததில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா விளக்கமளித்தது. இதனை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வந்தது.

இதனிடையே ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டு ஈரான் கைவசம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க சொத்துகளுக்கோ மற்றும் அதிகாரிகளுக்கோ ஆபத்து ஏற்பட்டால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் ஈரான் மற்றும் ஈராக் ஆதரவு படை மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்திய நேரப்படி அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஈரான் புரட்சிகரக் காவல்படையும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், ‘வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்க அதிபர் உத்தரவின் பேரில் ஈரான் ராணுவ தளபதி கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது. உலகின் எந்த மூலையில் அமெரிக்கர்கள் இருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபடும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

AMERICA, IRAN, IRANWAR