அவங்க 'கையில' வச்சுருக்கது 'என்ன'ன்னு தெரியுதா...? அதோட 'தலை' தான் ரொம்ப ஹைலைட்...! - டிரென்டிங் ஆகும் ஃபோட்டோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் இரட்டை தலையுடன் குஞ்சுப்பொரித்த ஆமையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் தென் கரோலினா கடற்கரைப் பகுதியில் உள்ள எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் மணல் பகுதிகளில் கடலாமைகள் முட்டை இடுவது வழக்கம்.
அதேப்போல் ஆமைகளின் முட்டைகள் மணலில் புதைந்து குஞ்சுகள் வெளி வராமல் இருக்கிறதா என எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் ரோந்து படை வீரர்களும், தன்னார்வலர்களும் அடிக்கடி சோதனை செய்வார்கள்.
அப்படி நடந்த சோதனையில் ஒரு பகுதியில் 3 முட்டைகள் மட்டும் பொரிக்கப்படாத நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த முட்டைகள் கிடைக்கப்பெற்ற சிறிது நேரத்திற்கு பிறகு தானாகவே குஞ்சுப்பொரிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த மூன்றில், ஒரு முட்டையில் இருந்து வெளியே வந்த ஆமை குஞ்சு மட்டும் இரட்டை தலையுடன் இருந்துள்ளது. இதனை கண்டு ஆச்சரியம் அடைந்த எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்கா ஊழியர்கள் இந்த ஆமையின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர்.
இந்த புகைப்படம், தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதுமாதிரி இரண்டு தலை கொண்ட கடல் ஆமைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தென் கரோலினாவின் மற்ற சில பகுதிகளிலும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்