'ஆகஸ்ட்' மாதத்துக்குள் அமெரிக்காவின் 'நிலை' என்னவாகும்?... 'அதிர்ச்சி' தகவலுடன் 'எச்சரிக்கும்' ஆராய்ச்சியாளர்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்தினால் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை விட 2 மடங்கு உயிரிழப்புகள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 1000க்கும் அதிமானவர்கள் உயிரிழந்து வருவதால் அந்நாடு நிலைகுலைந்து போயுள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 69 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது சிறிதளவு குறையத் தொடங்கியுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்தினால் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை விட 2 மடங்கு உயிரிழப்புகள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு பிரிவு ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் முரே, "தற்போதைய சூழலில் அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் 31 மாகாணங்களில் மே 11ஆம் தேதிக்குள் பாதிப்புகள் அதிகரிக்கும். மேலும் பல மாநிலங்களில் கோடையில் நோயின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊரடங்கை தளர்த்தினால் தற்போது கணிக்கப்பட்டுள்ள உயிரிழப்பு விகிதங்களின் படி அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1,35,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.