அமெரிக்காவில் மறுபடியும் போலீசாரால் ‘கருப்பின’ வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி.. ‘விஸ்வரூபம்’ எடுத்த போராட்டம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் விசாரணைக்கு வர மறுத்த கருப்பினத்தவரை போலீசார் ஒருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தில் போலீசார் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் நிறவெறியுடன் நடந்து கொண்டதாகக் கூறி அந்நாடு முழுவதும் பல போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி என்ற உணவகத்துக்கு வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்து இருக்கிறார் என கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்ற போலீசார், ரேஷார்ட் புரூக்ஸ் (27) என்ற அந்த கருப்பின வாலிபரை விசாரணைக்கு அழைத்தனர்.
ஆனால் அவர் வர மறுத்ததுடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த வென்டி என்ற உணவகத்தை தீ வைத்துக் கொளுத்தினர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், காவல்துறை உயர்திகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
மற்ற செய்திகள்