‘ரொம்ப நாளா எதிர்பார்த்த ஒன்னு’.. கொரோனாவால் பறிபோன ‘வேலை’.. அமெரிக்கா ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதில் அமெரிக்காவில்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கொரோனா காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலரும் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
கடந்த வார புள்ளி விவரங்களின் படி அமெரிக்காவில் கொரோனாவால் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்வதும், நிறுவனங்கள் மூடப்படுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா கால பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் ரூ.73.70 லட்சம் கோடி மதிப்பிலான மீட்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதுதொடர்பாக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எம்.பி.க்கள் மட்டத்தில் சமரசம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் அதற்கான உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு வாரத்துக்கு 30 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.22,110) உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவித்தொகை குறித்த அறிவிப்பு வெளியானது அந்நாட்டு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்