'இனிமேல் இந்தியாவ தொட்ட... நீ கெட்ட'!.. சீனாவுக்கு வைத்த செக்!.. அமெரிக்காவின் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்!.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவுக்கு எதிரான அத்துமீறலை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராணுவ கொள்முதல் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

'இனிமேல் இந்தியாவ தொட்ட... நீ கெட்ட'!.. சீனாவுக்கு வைத்த செக்!.. அமெரிக்காவின் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்!.. பின்னணி என்ன?

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்முதல் அங்கீகார கொள்கை மசோதா  நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும், செனட்டிலும் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது. அதில் இந்திய வம்சாவளியினரான எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்த தீர்மானமும் சேர்க்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் இந்தியா மீது நடத்தும் அத்துமீறலையும், போரைத் தூண்டும் செயல்களையும் நிறுத்திக் கொள்ளுமாறு சீனாவுக்கு அந்த கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கொள்கைக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தால் அது சட்டவடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது சீனா அத்துமீறினால் அதை அமெரிக்க பொறுத்துக் கொள்ளாது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும் என்று ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்