'எங்க அட்டாக் ரொம்ப உக்கிரமா இருக்கும்'... 'தாலிபான்கள் போட்ட தண்டனை லிஸ்ட்'... 'நாங்க சும்மா விட மாட்டோம்'... கொந்தளித்த அமெரிக்கா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரங்களைத் தாலிபான்கள் வெளியிட்டு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தார்கள்.

'எங்க அட்டாக் ரொம்ப உக்கிரமா இருக்கும்'... 'தாலிபான்கள் போட்ட தண்டனை லிஸ்ட்'... 'நாங்க சும்மா விட மாட்டோம்'... கொந்தளித்த அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாலிபான்கள் ஆட்சியிலிருந்த போது திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரின் கை, கால்களைத் துண்டிப்பது, பொது இடத்தில் தூக்கில் போடுவது எனக் கேட்டாலே பதறவைக்கும் அளவுக்கு அவர்களின் தண்டனைகள் கொடுமையாக இருந்தது.

US condemns Taliban for amputation, execution of criminals

இந்நிலையில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாலிபான் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர் முல்லா நூருதீன் துராபி,    தவறு செய்பவர்களுக்கு மீண்டும் பழைய தண்டனை முறை கொண்டு வரப்படும் என அதிரடியாக அறிவித்திருந்தார். அப்போது பேசிய அவர், ''தாலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது தவறு செய்பவர்களுக்கு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதுவும் குற்றத்திற்கு ஏற்ப கை, கால்களைத் துண்டிக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன.

எங்கள் தண்டனை முறைகளைப் பலர் கிண்டல் செய்வதோடு கேள்வியும் கேட்கிறார்கள். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே. எங்கள் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம். குரானின் அடிப்படையில் நாங்கள் எங்களின் சட்டதிட்டங்களை வகுக்கிறோம்'' எனத் தெரிவித்திருந்தார்.

US condemns Taliban for amputation, execution of criminals

இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள அமெரிக்கா, ''தாலிபான்கள் ஷரியத் சட்டத்தின் கீழ் தான் சட்டங்களை வகுத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, வழங்கப்படும் தண்டனைகளை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. தாலிபான்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் அமெரிக்கா, ஆப்கானில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகளின் நலன் காக்க நிச்சயம் துணை நிற்போம். அதே நேரத்தில் தாலிபான்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டால் அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது'' எனக் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்