‘அட இதல்லவா மனிதநேயம்’!.. தொழிலதிபரின் அதிரடி முடிவால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள்! நெகிழ வைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தொழிலதிபர் 400 மாணவர்களின் கல்விக்கடனை தானே செலுத்தயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவின் அமைந்திருக்கும் மோர்ஹவுஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க தொழிலதிபரான ராபர்ட் எஃப் ஸ்மித்துக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது பேசியவர், அந்த நிகழ்ச்சியில் பட்டம் பெறும் 400 மாணவர்களின் கல்வி கடனை தானே முழுமையாக செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தொழிலதிபரின் முடிவை கேட்டு உற்சாகமடைந்தனர். மேலும் கூறியவர், ‘இந்த 400 மாணவர்களும் கருப்பின மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள்’ என்று எதிர்பார்ப்பதாக ராபர்ட் கூறியுள்ளார்.
மேலும், இந்திய ரூபாயின் மதிப்பில் இந்த 400 மாணவர்களின் மொத்த கல்வி கடனும் சேர்த்து மொத்தம் 278 கோடி ரூபாய் ஆகும். இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி நிர்வாகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.