‘சீன அணு உலையில் கசிவு?’.. பிரான்ஸ் நிறுவனம் ‘பகீர்’ புகார்.. அமெரிக்கா அவசர ஆலோசனை.. சைலண்ட் மோடில் இருக்கும் சீனா..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீன அணு உலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதை நிர்வகிக்கும் பிரான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிடம் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தனது மொத்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 5 சதவீதத்துக்கும் மேல் அணுமின் நிலையங்களில் இருந்துதான் பெறுகிறது. இந்த நிலையில் சீனாவின் குவாங்டாங் (Guangdong) பகுதியில் உள்ள டைஷான் அணுமின் நிலையத்தில் (Taishan nuclear power plant) கசிவு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த அணு உலையை சீன அரசும், ஃபிரேமாடோம் (Framatome) என்ற பிரான்ஸ் தனியார் நிறுவனமும் இணைந்து நிர்வகித்து வருகின்றன.
இந்த நிலையில் டைஷான் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஃபிரேமாடோம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கதிரியக்க அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பிரான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிடம் புகார் அளித்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் இருந்து அணுக்கதிர் வீச்சு அதிகரிப்பதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அணுக்கதிர் வீச்சு தாங்கு திறன் அளவை சீனா அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது மக்களால் தாங்க கூடிய அணுக்கதிர் வீச்சின் அளவை சீனா உயர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் இருந்து கசிவு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டால், அணுமின் நிலையத்தை மூட வேண்டிய நிலை வரும் என்பதால், அணு கதிர் வீச்சு தாங்கு திறன் அளவை சீனா உயர்த்தி உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் உதவியை பிரான்ஸ் நிறுவனம் நாடியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. பிரான்ஸ் நிறுவனம் இதுகுறித்து சீன அரசிடம் தெரிவிக்காமல், அமெரிக்காவின் உதவியை நாட காரணம் என்ன என தெரியவில்லை. ஆனால் இந்த விஷயம் தொடர்பாக சீன அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.
News Credits: CNN
மற்ற செய்திகள்