Tap தண்ணீரில் 'கொடிய' அமீபா... 'கொரோனாவுக்கு நடுவே அமெரிக்காவில் பீதி'... '8 நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு நடுவே ஏற்பட்டுள்ள மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு பீதியை உண்டாக்கியுள்ளது.

Tap தண்ணீரில் 'கொடிய' அமீபா... 'கொரோனாவுக்கு நடுவே அமெரிக்காவில் பீதி'... '8 நகரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஜாக்சன் லேக் பகுதியில் குழாய் நீரை குடித்த ஒரு குழந்தை அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளது. விசாரணையில், விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் மூளையை உண்ணும் நுண்ணுயிரியான அமீபா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து டெக்சாஸ் மாநில மக்களிடம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

US 8 Texas Cities Alerted To Brain Eating Amoeba Found In Tap Water

அதில், "வாய் மற்றும் மூக்கு வழியாக நீர் உடலில் நுழைய அனுமதிக்க கூடாது. ஜாக்சன், ப்ரீபோர்ட், ஆங்கிள்டன், பிரசோரியா, ரிச்வுட், சிப்பி  க்ரீக், க்ளூட் மற்றும் ரோசன்பெர்க் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட நீரை குடிக்க கூடாது" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நிபுணர்கள், "அமீபா என்ற நுண்ணுயிர் தொற்று மூக்கு வழியாக மூளையை அடைகிறது. இந்த அமீபா நுண்ணுயிரி மூளையை உண்ணக் கூடியது. இந்த அமீபா நெகலேரியா ஃபோலர்லீ என்று அழைக்கப்படுகிறது.

US 8 Texas Cities Alerted To Brain Eating Amoeba Found In Tap Water

இது மூளையில் ஆபத்தான தொற்றுநோய்களை ஏற்படுத்தும். மூக்கு வழியாக மூளைக்கு சென்று, அங்கிருந்து உடலின் அனைத்து பகுதிக்கும் செல்கிறது. குடிநீர் விநியோகத்தில் காணப்படும் இந்த அமீபா தொற்று பாதிப்பு புதியது அல்ல. 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தெற்கு லூசியானாவில் அமீபா தொற்று தாக்கி இறப்புகள் நடந்தன. அமெரிக்க நோய் தடுப்பு மையத்தின் தகவல்படி, இந்த மூளை உண்ணும் அமீபா, ஏரிகள், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் காணப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்