இந்த சாப்ட்வேருக்கு உள்ள இருக்கும் 'டெக்னாலஜி' தான் ஹைலைட்...! 'இருமல் சவுண்ட ஸ்கேன் பண்ணியே...' - கொரோனவான்னு கரெக்ட்டா சொல்லும்...!
முகப்பு > செய்திகள் > உலகம்நோய் பாதிக்கப்பட்டவரின் இருமல் சத்தத்தை வைத்தே அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் மென்பொருளை கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியது முதல் அதனை கண்டறியவும், வைரஸ் தொற்றை குணப்படுத்தவும் பல உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. தற்போது பல நாடுகள் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சமயத்தில் வைரஸின் இரண்டாம் அலை குறித்தான அச்சமும் மக்களிடம் மேலோங்கியுள்ளது.
அதனை சமாளிக்கும் வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இந்த மென்பொருளை அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் தற்போது ஐஇஇஇ ஜர்னல் ஆஃப் இன்ஜினியரிங் இன் மெடிசின் அண்ட் பயாலஜி' என்ற இதழில் வெளிவந்துள்ளது.
அவ்வாய்வில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இந்த மென்பொருளை இயக்கி பார்த்தபோது, அது 98.5 சதவீதம் சரியான முடிவுகளையும், கொரோனா நோய்த்தொற்றுக்கான இருமல் தவிர்த்த வேறெந்த அறிகுறியும் இல்லாதவர்களை 100 சதவீதமும் சரியாக கண்டறிந்துள்ளது. அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளின் இருமலின் ஒலியின் முக்கியமான வேறுபாட்டை மனித காதுகளால் கேட்க முடியாது என்றும் அதை தங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சாத்தியமாக்கி உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் அனைத்து வேலை நிறுவனங்களும், ஒரு சில நாடுகளில் பள்ளி கல்லூரிகள் திறப்பட்ட நிலையில் இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் கொரோனா வைரஸ் பாதித்தோரை கண்டறிய எதுவாக இருக்கும் என பலர் கருதுகின்றனர்.
மற்ற செய்திகள்