'அது' உண்மையில் 'UFO' தானா?.. பரபரப்பு 'வீடியோ' சர்ச்சைக்கு 'அமெரிக்க' கடற்படையின் 'ஆச்சர்ய' பதில்!'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க வான் வெளியில் ஏதோ பறந்து வந்ததாக கடந்த ஆண்டுகளில் வெளியான வீடியோக்களில் இருப்பவை UFO(unidentified flying object) எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்தான் என்று அமெரிக்க கடற்படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மின்னல் வேகத்தில் வானில் சில பொருட்கள் பறந்து வந்தது போலான வீடியோக்கள் தனியார் நிறுவனங்களால் வெளியிடப்பட்டு பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணின. இவை ஆபத்தானவையாக இருக்கக்கூடும் என்கிற கோணத்தில் விவாதங்களும் உலகமுழுவதும் நடைபெற்றன.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அமெரிக்க கடற்படை, “பொதுவெளியில் வெளிவந்த இந்த வீடியோக்களில் உள்ள பறக்கும் பொருட்கள் எவ்விதத்திலும் ஆபத்தானவை அல்ல” என்றும் அதேசமயம் இந்த வீடியோக்களில் உள்ள உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்த விளக்கத்தை அளிப்பதாகவும் அமெரிக்க கடற்படை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.