H-1B விசா விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்...! 'ஆனா இந்த விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா பண்ணனும்...' - அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்டுள்ள தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

H-1B விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

H-1B விசா விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்...! 'ஆனா இந்த விஷயங்கள் எல்லாம் கண்டிப்பா பண்ணனும்...' - அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்டுள்ள தகவல்...!

இதற்காக, அமெரிக்கா இரண்டாவது முறையாக லாட்டரி செயல்முறையை உருவாக்கியுள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் இந்த தகவலை தெரிவித்துள்ளது. முதல் லாட்டரியில் H-1B விசா பெற இயலாத நூற்றுக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களுக்கு இது மேலும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

H-1B விசாவிற்கான தேவை இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த வல்லுநர்களுக்கு தான் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசா அமெரிக்க நிறுவனங்கள், சிறப்பு தொழில்நுட்ப நிபுனத்துவம் தேவைப்படும் வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது.

குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்டுள்ள தகவலில், '2022-ஆம் நிதியாண்டில் போதுமான எண்ணிக்கையை அடைய இன்னும் சில பதிவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இதற்காக ஏற்கனவே ஜூலை-28 அன்று சமர்ப்பிக்கப்பட்ட சில பதிவுகளை தோராயமாக தேர்ந்தெடுத்துள்ளோம். இப்போது இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளின் அடிப்படையில், மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட்-2 முதல் நவம்பர்-3 வரை நேரம் அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளைக் கொண்ட தனிநபர்கள் தேர்வு அறிவிப்பில் சேர்க்கப்பட அவர்களது கணக்குகள் புதுப்பிக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.

HC-1B கேப்-சப்ஜெக்ட் மனுக்களை சரியான சேவை மையத்தில் சரியான காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் உத்தரவிட்டுள்ளது. இதனுடன், HC-1B மனுவிற்கான ஆன்லைன் தாக்கல் இல்லை என்று குடிவரவு சேவைகள் கூறியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் மனுவுடன் பதிவுத் தேர்வு அறிவிப்பின் அச்சிடப்பட்ட நகலையும் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு, விண்ணப்பதாரர்கள் எச் -1 பி கேப்-சப்ஜெக்ட் மனுவை தாக்கல் செய்யலாம் என்பதை மட்டுமே குறிப்பிடுகிறது, அவர்களது மனு அங்கீகரிக்கப்படும் என்று குறிப்பிடவில்லை." என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்