வாழ்க்கையில 'அதிர்ஷ்டம்' எப்போ வேணும்னாலும் 'கதவ' தட்டலாம்...! 'ரொம்ப நாளா போகணும்னு நினச்சிட்டு இருந்த இடம்...' - தம்பதிகளுக்கு அடித்த 'வேற லெவல்' ஜாக்பாட்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் Northern California-வை சேர்ந்த Noreen-Michael Wredberg தம்பதிகள் அமெரிக்காவின் இரண்டு தேசிய பூங்காவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துள்ளனர்.

வாழ்க்கையில 'அதிர்ஷ்டம்' எப்போ வேணும்னாலும் 'கதவ' தட்டலாம்...! 'ரொம்ப நாளா போகணும்னு நினச்சிட்டு இருந்த இடம்...' - தம்பதிகளுக்கு அடித்த 'வேற லெவல்' ஜாக்பாட்...!

அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் Arkansas-வில் இருக்கும் தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளனர். அங்குமட்டுமில்லாமல், Murfreesboro-வில் இருக்கும் Crater of Diamonds மாநில பூங்காவிற்கு சென்றுள்ளனர்.

United States couple rare yellow diamond in a national park.

Crater of Diamonds State Park அமெரிக்காவில் இருக்கும் Arkansas-ன் பைக் கவுண்டியில் உள்ள 911 ஏக்கர் கொண்ட ஒரு மாநில பூங்காவாகும். இங்கு பூங்காவில் 37.5 ஏக்கர் உழவு செய்யப்பட்ட வயல் உள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உலகிலேயே இந்த பூங்கா மட்டும் தான் பொதுமக்கள் அணுகக்கூடிய வைரம் இருக்கும் இடம். இந்த பூங்காவை சுற்றி பார்க்க மட்டும் Noreen-Michael Wredberg தம்பதிகள் சுமார் 40 நிமிடம் செலவு செய்துள்ளனர்.

United States couple rare yellow diamond in a national park.

அப்போது Noreen தரையில் ஏதோ மினிமினுப்பதை கண்டுள்ளார். மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த கல் போன்ற பொருளை எடுத்து பார்த்தபோது அது மிகவும் பிரகாசமாக மின்னியுள்ளது.

அதன்பின், அந்த தம்பதிகள் அந்த கல்லை பூங்காவில் இருக்கும் வைரம் தானா என்று உறுதி செய்யும் மையத்திற்கு எடுத்து சென்று அங்கிருக்கும் அதிகாரிகளிடம் கொடுத்து சோதித்து பார்த்த போது, அது உண்மையில் ஒரு வைரம் என்பதை உறுதி செய்தனர்.

United States couple rare yellow diamond in a national park.

இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை Noreen-Michael Wredberg தம்பதிகள் கண்டுபிடித்துள்ள வைரத்திற்கு அவர்கள் லூசி என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த வைரம் இன்றைய தேதியில் சுமார் 15,330 டாலர் விலை போகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு மட்டும் இதேப்போல் பார்வையாளர்களால் 258-வது வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1906 முதல் இதுவரை சுமார் 75,000-க்கும் மேற்பட்ட வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்