'ஒரு பக்கம் ஐடி'... 'மறுபக்கம் இடியாய் விழுந்த செய்தி'... 'கலங்க வைத்த புதிய ரிப்போர்ட்'... நிம்மதியை இழந்த அமெரிக்க மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவிற்கு அமெரிக்கா மீது என்ன கோபமோ தெரியவில்லை, அப்படி ஒரு கோரத் தாண்டவத்தை அங்கே ஆடி வருகிறது.
உலக அளவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் 24 லட்சத்து 80 ஆயிரத்து 165 பேருக்குப் பரவியுள்ளது. ஒரு பக்கம் மருத்துவர்களும், ஆய்வாளர்களும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில், மறுபக்கம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனா பரவியவர்களில் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 248 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சீனாவில் ருத்திர தாண்டவம் ஆடிய கொரோனா தற்போது அமெரிக்காவில் அதன் ஆட்டத்தை ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.தற்போது புதிய உச்சமாக அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த செய்தி அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 759 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 123 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவிற்கு ஒரே நாளில் ஆயிரத்து 939 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐடி துறை மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. நிலைமை கட்டுக்குள் வந்தால் கூட, ஐடி துறையில் பணியாற்றும் பலரும் தங்களுக்கு வேலை போகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனாவின் பலி எண்ணிக்கை, மற்றொரு புறம் வேலை குறித்த பயம் என அமெரிக்க மக்கள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.