அய்யோ, 'மறுபடியும்' ஆரம்பிச்சிட்டாங்களா...? 'சாட்டிலைட்' புகைப்படத்தில் தெரிய வந்துள்ள 'அதிர' வைக்கும் தகவல்...! - உறுதிப்படுத்திய ஐ.நா...!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியா பெரும்பாலும் தங்கள் அரசு பட்ஜெட்டில் பெரும்பாலான சதவீதத்தை ராணுவ ஆயுதங்களுக்கும், அணு உலைகளுக்கும் செலவிடும்.
வட கொரியாவின் யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலையில் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் தயாரிக்கப்படுவதாக செய்தி வெளியானது.
இதன்காரணமாக, சர்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பினராக இருந்த வட கொரிய அரசு 2009-ம் ஆண்டு நீக்கப்பட்டது. இப்போது மீண்டும் வடகொரியா யங்பியன் அணு உலையை இயக்கி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த செய்தி, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதை. இந்த சம்பவம் குறித்து, அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான, ஐ.நா-வின் சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'வடகொரியாவின் யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலை கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.
யங்பியன் அணுசக்தி வளாகம் வட கொரிய அணு ஆயுத திட்டத்தின் மையமாக உள்ளது. இந்த அணு உலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் சந்தித்த பின்பு சில மாதங்களிலேயே இந்த அணு உலை பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.
இந்த் அணு உலை பல நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக உள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்