கடலுக்கு அடியில் மர்ம உயிரினம்.. "என்னன்னு தெரியாம ஒட்டுமொத்த டீமும் கெறங்கி போய் கெடக்கு"..
முகப்பு > செய்திகள் > உலகம்கடற்கரை என்பது எந்த அளவுக்கு அற்புதமும், அழகான விஷயங்களும் நிரம்பி கிடக்கிறதோ அந்த அளவுக்கு கடல் நீருக்கு அடியில் ஏராளமான ஆச்சரியங்கள், மர்மங்கள் என்ன பல விஷயங்களும் புதைந்து கிடக்கிறது.
அவ்வப்போது கடலுக்கு அடியில் இருந்து ஏதேனும் வினோதமான நிகழ்வு தொடர்பாகவோ அல்லது அரிய வகை உயிரினம் பற்றியோ ஆய்வாளர்களே மிரண்டு போகும் வகையில் தகவல்கள் வெளியாகும்.
அப்படி ஒரு அரிய வகை உயிரினம் பற்றிய தகவல் தான், தற்போது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் அட்லாண்டிக் கடற்கரை பகுதியில், கடல் நீருக்கு அடியில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது முன் பின் தெரியாத வகையிலான உயிரினம் ஒன்றை நீருக்கு அடியில் கண்டு மிரண்டு போயுள்ளனர். Blue Goo என்ன பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினம், பல முறை ஆராச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் இது என்ன என்பதை இன்னும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.
இந்த அரிய உயிரினம் தொடர்பான வீடியோ ஒன்றை NOAA என்ற அமைப்பு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மங்கிய நீல நிறத்தில் இருக்கும் இந்த உயிரினம், ஒரு அசாதாரண தோற்றத்தில் உள்ளது. அது மட்டுமில்லாமல், இதற்கு முன்பு கண்ட எந்த ஒரு உயிரினம் போல் இது இல்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதே வேளையில், இந்த உயிரினம் என்ன என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஆய்வாளர்கள் தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். Blue Goo என்ற உயிரினம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | "என் வீட்டுக்கு சாப்பிட வருவீங்களா??"... ஆட்டோ ஓட்டுநர் வைத்த Request.. நெகிழ வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்!!
மற்ற செய்திகள்