கடலுக்கடியில் 'பயங்கர' நிலநடுக்கம்...! சுனாமி வர சான்ஸ் இருக்கா...? - பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் இந்தோனேசிய மக்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவில் நேற்று (26-07-2021) கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 105 பேர் உயிரிழந்த சம்பவம் இன்னும் நினைவிலிருந்து மறையாத நிலையில் மீண்டும் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (26-07-2021) கடலுக்கடியில் மத்திய சுலவெசி மாகாணத்தைச் சோந்த லுவுக் நகரிலிருந்து 98 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் 6.2 என்ற ரிக்டா் அளவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது.
வலுவான இந்த நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் எதுவும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது, மேலும், சுனாமி அபாயம் எதுவும் இல்லையென இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.
மற்ற செய்திகள்