“இந்த கான்செப்டை நம்பி கொரோனாவ பரவ விடுறது அறமற்ற செயல்!” - ‘உலக நாடுகளை’ எச்சரிக்கும் ஐ.நா, உலக சுகாதார அமைப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்று சொல்லப்படும் மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் என்பதை நம்பியிருக்க வேண்டாம், அது அறிவியல் பூர்வமானதல்ல, அது‘அறம் அற்ற செயல்’என்று உலக சுகாதார மையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அம்மை உள்ளிட்ட வைரஸ் தொற்று நோய்களுக்கு 95% மக்கள் தொகை நோய்த்தடுப்பூசி அளிக்கப்பட்டு தடுப்பாற்றல் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதனாம் கேப்ரியேசஸ் என்று கூறியிருக்கிறார். மேலும் ஹெர்டு இம்யூனிட்டி என்பது கிருமி தொற்றாமல் தடுப்பதில்தான் இருக்கிறதே தவிர, அதிகம் பேரை கொரோனா வைரஸுக்குப் பாதிக்கச் செய்யுமாறு செய்வதல்ல. தப்புக் கணக்குப் போட வேண்டாம் என்று கேப்ரியேசிஸ் எச்சரிக்கிறார்.
பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டால் அது ஹெர்டு இம்யூனிட்டியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் வாதிடுவதையும், லாக்டவுன் ஏற்படுத்தும் பொருளாதார அழிவுகளிலிருந்து மீளலாம் என்று நம்புவதையும் விமர்சித்த டெட்ராஸ் அதனாம் கேப்ரியேசஸ் வரலாற்றில் இப்படி ஒரு பெருந்தொற்று நோய்க்காலத்தில் ஹெர்டு இம்யூனிட்டி அடையும் போக்கு இருந்ததில்லை, என்றும் ஒருபோதும் இருந்ததில்லை. அத்துடன் அதற்கான முறையான ஆதாரங்கள் இல்லாத சூழலில் ஹெர்டு இம்யூனிட்டியை பரவ செய்வதன் மூலம் சாதிக்க நினைப்பது எப்படி முடியும்? என்றும் கேட்டுள்ளார்.
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கூட மீண்டும் பாதிக்கப்படுவதைப் பார்த்து வரும் நிலையில், ஹெர்டு இம்யூனிட்டியை தவறாக புரிந்துகொண்டு வைரஸை பரவவிடுவது அறமற்ற செயல் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 10%க்கும் குறைவான மக்களிடத்தில்தான் ஹெர்டு இம்யூனிட்டி உள்ளது என்பதும், ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தினசரி கரோனா தொற்று விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் உலகச் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்