ரொம்ப 'ஆபத்தா' போய்கிட்ருக்கு...! 'இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல...' இந்த நேரத்துல 'ஏவுகணை' சோதனை ரொம்ப முக்கியமா...? - எச்சரிக்கும் ஐநா அதிகாரிகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஐ.நா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உலகிலேயே காடு மலைகளில் வாழும் ஆதிவாசிகளை போல உலகத்தோடு ஒத்துப்போகாமல் தங்களுக்கென ஒரு வருடம், ஒரு அரசு, பல கடுமையான கட்டுப்பாடுகள், இணையம், போதுமான மின்சாரம் இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரே நாடு வடகொரியா.
வடகொரிய அதிபர் தனக்கு செலவு செய்து கொள்ளும் அளவில் 1 சதவீதம் மக்களுக்கு அளித்தாலும் வடகொரியாவில் இப்போதிருக்கும் நிலை இல்லாமல் இருக்கலாம். வடகொரியா பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக்கொள்ள நினைப்பதை விட ராணுவ ரீதியாகவே தங்களை உலகளவில் மேம்படுத்திக்கொள்ள நினைக்கிறது. அதனாலேயே தங்கள் நாட்டின் 60% செலவுகளை ராணுவத்திற்கே பயன்படுத்துகிறது.
வடகொரியாவின் இந்த செயலால் பெரிதும் பாதிக்கப்படுவது அந்நாட்டின் பொதுமக்கள் தான். அதோடு இப்போது மேலும் ஒரு இக்கட்டான சூழல், வடகொரியாவில் நடந்து வருகிறது.
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை செய்து வருவதால் பல நாடுகள் வடகொரியா மீது ஏற்றுமதி இறக்குமதி தடை விதித்தன. அதோடு, கொரோனா தொற்று பரவலை தடுக்க வடகொரியா தனது எல்லையை மூடியது. இதனால் தற்போது வடகொரியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டதுள்ளது.
இதுகுறித்து கூறிய வட கொரியாவில் உள்ள ஐநாவின் சிறப்பு அதிகாரி 'வடகொரியாவில் வாழும் மக்கள் உணவு பஞ்சத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க அந்த தடைகளை நீக்க வேண்டும்' என ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளார்.
வடகொரியா உணவு, பூச்சிக்கொல்லி மற்றும் எரிபொருளுக்காக சீனாவையே ஆனால் கொரோனா காரணமாக சீனாவுடனான எல்லையை மூடியதால் அந்நாட்டுடனான வணிகம் நின்று போய் இப்போது உணவு பஞ்சம் மேலும் அதிகரித்துள்ளது.
என்னதான் கடுமையான பஞ்சம் ஏற்பட்டாலும் வடகொரியா மக்களை பற்றி கவலைப்படாமல் இப்போதும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த நிலையில் வட கொரியா இதனை ஏற்கவில்லை.
மேலும் ஐ.நா அதிகாரி குவாண்டானா கூறுகையில், 'சர்வதேச நாடுகள் வடகொரியா மீது விதித்திருக்கும் தடையை தளர்த்துவதற்கு வழி செய்து அங்கு உயிர்காக்கும் உதவிகள் சென்று சேர வழி வகை செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்