Ukraine Russia War: "ரஷ்யாவுக்கு எதிராக தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன்".. உக்ரைன் பெண் எம்.பி. அதிரடி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் கடந்த 24ம் தேதி ரஷ்யா தொடுத்துள்ள போரால் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை. இதனால் உள்நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். வாகன வசதி இல்லாதவர்கள் கால்நடையாக நடந்து செல்கிற அவலம் நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷியா இடையே போர் நடந்து வருவதால், இருநாட்டு ராணுவத்திலும் உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன. ரஷ்ய ராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது.

Ukraine Russia War: "ரஷ்யாவுக்கு எதிராக தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன்".. உக்ரைன் பெண் எம்.பி. அதிரடி

இதுதவிர ரஷய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம், ஐ.நா.,வுக்கான உக்ரைன் துாதர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா அறிவுறுத்தி உள்ளார்.  இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக போரிட ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என உக்ரைன் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டிருந்தார்.

அதிபரின் அழைப்பை ஏற்று உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்கி ஸ்டாகோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட தனது நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து,  ரஷ்ய ராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்த தயாராக இருப்பதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "துப்பாக்கியை தாம் வெறுப்பதாகவும், ஆனால் எந்த ஒரு ரஷ்ய வீரரும் தமது நாட்டிற்குள்ளும், வீட்டிற்குள்ளும் நுழைய அனுமதிக்க மாட்டேன். தேவை ஏற்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன். இதற்காக தமது சகோதர் மற்றும் நண்பர்கள் மூலம் பயிற்சி எடுத்துள்ளேன்.  நாட்டிற்காக போரிட தயார், அதையும் சிறப்பாக செய்வேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உக்ரைன் உள்ளிட்ட பிற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.  அவரது பேட்டியை தொடர்ந்து, உக்ரேன் நாட்டு எம்பிக்கள்,  கிரா ருடிக் மற்றும் லெசியா வாசிலென்கோ ஆகியோர் தேசத்தை பாதுகாக்க நாடு முழுவதும் உள்ள பெண்கள், அரசியல்வாதிகள் தேவைப்படும் நேரத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

UKRAINE WAR, RUSSIA, INNA SOVSUN, UKRAINE MP

மற்ற செய்திகள்