Valimai BNS

Russia-Ukraine Crisis: "அவங்களோட நம்பர்.1 டார்கெட் நான்தான்.. என்ன ஆனாலும் சரி".. அதிபரின் உருக்கமான வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

"ரஷ்யா உடனான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டு இருக்கிறோம்" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சோகம் ததும்பிய குரலில் சொன்னார். உக்ரைனின் வான், கடல் மற்றும் தரை என அனைத்து வழிகளிலும் ரஷ்யாவின் படைகள் நுழைந்துவிட்டன. விமான நிலையம், போக்குவரத்து அமைப்புகள் என உக்ரைனின் முக்கிய பகுதிகளை பிடிக்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தலைநகரத்தை விட்டு வெளியேற மாட்டேன் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

Russia-Ukraine Crisis: "அவங்களோட நம்பர்.1 டார்கெட் நான்தான்.. என்ன ஆனாலும் சரி".. அதிபரின் உருக்கமான வீடியோ..!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்.. "படைகளை அனுப்ப மாட்டோம்" என அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு..!

தலைநகரத்தை நோக்கி

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்  ஐரோப்பா சந்திக்கும் மிகப்பெரிய போர் இது இதில், ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தை நோக்கி பயணித்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி," ரஷ்யாவின் நம்பர் 1 டார்கெட் நான்தான். எனது குடும்பம் இரண்டாவது இலக்கு. நாட்டின் தலைமையை அழித்து அதன்மூலம் உக்ரேனின் அரசியல் தலைமையை ரஷ்யா பிடிக்க நினைக்கிறது. என்ன ஆனாலும் சரி நானும் என்னுடைய குடும்பமும் வெளியேறப்போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில்," இன்று நமக்கு கேட்பது என்ன? வெறும் குண்டு வெடிப்புகளோ, ராக்கெட்களின் சத்தமோ அல்ல. நாகரீக உலகிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இரும்புத் திரை விழும் சத்தம் தான் அது" என்றார்.

Ukraine President vows to stay in Kyiv amid invasion

நேற்று துவங்கிய போரில் 137 உக்ரைன் மக்கள் மரணம் அடைந்து இருக்கிறார்கள் எனவும் பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும்.  ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருக்கிறார்.

புதின் மிரட்டல்

"ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகள் வரலாற்றில் இதுவரை சந்திக்காத பின்விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்" என புதின் எச்சரித்துள்ளார். மேலும், உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி புதின் நேற்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரை கைவிட உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ரஷ்யா - உக்ரைன் போர்: கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டை மொத்தமாக சரித்த போர்.. உறைந்துபோன முதலீட்டாளர்கள்.!

 

RUSSIA, UKRAINE, RUSSIA-UKRAINE CRISIS, UKRAINE PRESIDENT, KYIV AMID INVASION, ரஷ்யா, உக்ரைன்

மற்ற செய்திகள்