Valimai BNS

குண்டு மழை பொழியும் ரஷ்யா.. பாதுகாப்புக்காக கூட்டம் கூட்டமாக உக்ரைன் மக்கள் செல்லும் இடம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் ஏற்பட்டுள்ளதால் உக்ரைன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

குண்டு மழை பொழியும் ரஷ்யா.. பாதுகாப்புக்காக கூட்டம் கூட்டமாக உக்ரைன் மக்கள் செல்லும் இடம்..!

ரஷ்யா - உக்ரைன் போர்.. "அவர்கிட்ட சீக்கிரம் பேசுங்க".. பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்கும் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது டெல்லியில்?

உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனால் லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் கடுமையாக சண்டை நடந்து வருகிறது.

ரஷ்யா

இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷ்யா சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.  ரஷ்யாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

மெட்ரோ

அதனால் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பு பகுதிக்கு செல்ல உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியாக செல்ல இயலாதவர்கள் ரயில்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு வகை வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. உக்ரைனில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா குண்டு வீசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ukraine people hiding in metro stations amid Russia invasion

குண்டு மழை

உக்ரைன் தலைநகர் கீவ், கிழக்கு துறைமுக நகரான மரியூபோல், கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா மீது போர் விமானங்கள் மூலம் ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷ்யா, சைபர் தாக்குதலையும் தொடங்கியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் உக்ரைன் அரசின் முக்கிய இணையதங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல்

உக்ரைன் அரசின் வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதங்களில் தகவல் அழிப்பு டூல் மால்வேர் மூலம் ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அங்க அடிச்சா இங்க வலிக்கும்.. உலகையே அதிர வைத்துள்ள ரஷ்யா - உக்ரைன் போர்.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

UKRAINE, METRO STATIONS, UKRAINE PEOPLE, RUSSIA INVASION, ரஷ்யா, உக்ரைன், உக்ரைன்-ரஷ்யா போர்

மற்ற செய்திகள்