உக்ரைன் - ரஷ்யா போர் : "மோடி மனசு வெச்சா அது நடக்கும்.. உடனே புதினுக்கு போன் பண்ணுங்க.." வேண்டுகோள் வைக்கும் தூதர்
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. அந்நாட்டின் ராணுவ மற்றும் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், சில முக்கிய நகரங்களின் மீதும் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ரஷ்ய அதிபர் புதின், இந்த போருக்கு நடுவே யாரும் வந்தால், கடுமையான சிக்கலை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இன்னொரு பக்கம், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை வைத்து வருகிறது.
அதே போல, இந்த போர் மூலம் உலக பொருளாதாரம் பாதிப்படையும் என்றும் பல உலக நாடுகள் கவலையில் உள்ளது. தங்கள் மீதான போரை நிறுத்த, உலக நாடுகள் உதவியை நாடி உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
மோடி ஆலோசனை
உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனை நடத்தியிருந்தார். மூத்த மந்திரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மோடி ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இந்த போரின் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட போகும் பாதிப்புகள் மற்றும் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மோடி சொன்னா கேப்பாரு
இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுக்கும் ரஷ்ய நாட்டின் அதிபர் புதனுடன், பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என உக்ரைனிலுள்ள இந்திய தூதரகம், பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.
இது பற்றி அவர் பேசுகையில், 'ரஷ்யாவுடன் இந்திய அரசுக்கு சிறப்பான உறவு உள்ளது. உக்ரைனில் தற்போது நிலவும் சூழ்நிலையை இந்தியாவால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். உடனடியாக ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேச வேண்டும் என வலியுறுத்திகிறோம்.
சாதகமான பதில்
எந்த உலக தலைவர் சொன்னால், புதின் கேட்பார் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், நரேந்திர மோடியால், நிச்சயம் சிறப்பான ஒரு பங்களிப்பை அளிக்க முடியும். மோடி சொன்னால், குறைந்தபட்சம் இந்த விவகாரம் பற்றி, புதின் யோசிக்கவாவது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அரசிடம் இருந்து, மிகவும் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம்' என இகோர் பொலிகா தெரிவித்துள்ளார்.
பொய் கூறும் ரஷ்யா
மேலும் பேசிய இகோர், 'ரஸ்யாவின் தாக்குதலால், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. ராணுவ மையங்களை மட்டுமே ரஷ்யா தாக்கியதாக பொய் கூறுகிறது. உண்மையில் பொதுமக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர். எல்லையைத் தாண்டி, உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளது. 5 ரஷ்ய விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள், உக்ரைன் படைகள் சார்பில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன' என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்