"ஒரு எஞ்சின் Work ஆகல.. பக்கத்துல இருக்க ஏர்போர்ட்ல தரையிறக்கணும்".. கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் கொடுத்த விமானி.. கொஞ்ச நேரத்துல கேட்ட பயங்கர சத்தம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனை சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று கிரீஸ் நாட்டில் பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

"ஒரு எஞ்சின் Work ஆகல.. பக்கத்துல இருக்க ஏர்போர்ட்ல தரையிறக்கணும்".. கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் கொடுத்த விமானி.. கொஞ்ச நேரத்துல கேட்ட பயங்கர சத்தம்..!

Also Read | "தல முடி இந்த Colour-ல இருந்தா சினிமா டிக்கெட் Free".. புதுசால்ல இருக்கு? விசேஷ அறிவிப்பின் பிண்ணனி..!

உக்ரைனை தலைமையிடமாகக்கொண்ட விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் சரக்கு விமானம் வடக்கு கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகில் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெரிடியன் என்ற கார்கோ கேரியரால் இயக்கப்படும் இந்த விமானம் செர்பியாவில் இருந்து ஜோர்டான் செல்லும்வழியில் விபத்தில் சிக்கியுள்ளதாக கிரீஸ் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பழுதடைந்த எஞ்சின்

விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் ஒரு எஞ்சின் பழுதடைந்துவிட்டதாகவும் அதனால் உடனடியாக அருகில் உள்ள தெசலோனிகி அல்லது கவாலா விமான நிலையங்களில் ஒன்றில் தரையிக்க இருப்பதாக அந்த விமானி தெரிவித்திருக்கிறார்.

Ukraine carrier cargo plane crashes in Greece

இதனையடுத்து கவாலா விமான நிலையத்துக்கு செல்ல அந்த விமானி முடிவெடுத்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

விசாரணை

கவாலா விமான நிலையத்திற்கு மேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது என்று கிரீஸின் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது. பகாயோ நகராட்சியின் மேயர் பிலிப்போஸ் அனஸ்டாசியாடிஸ் இதுபற்றி பேசுகையில்,"விபத்து நடந்த இடத்திலிருந்து நான் சுமார் 300 மீட்டர் தொலைவில் இருக்கிறேன். பலத்த சத்தம் கேட்டது. அந்த இடமே தீப்பிழம்புகளால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானத்தில் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்றார்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திவருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தெரியவரும் எனவும் கிரீஸின் சிவில் ஏவியேஷன் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read | Kallakurichi: இறந்த மாணவியின் தாய் எழுப்பிய கேள்விகளும்.. பள்ளி நிர்வாகத்தின் விளக்கமும்.. முழு விபரம்..!

UKRAINE, UKRAINE CARRIER CARGO PLANE, CRASHES, GREECE

மற்ற செய்திகள்