எப்போதும் கேட்ட குண்டு சத்தம்.. 150 கோடி மதிப்புள்ள வீட்டில் தனியா இருந்த தொழிலதிபர் செஞ்ச பதைபதைக்கும் காரியம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது ரஷ்யா உச்சகட்ட போரை நடத்திவரும் வேளையில் உக்ரைனில் பிறந்த ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் தனது பங்களாவில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தொழில்துறை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய தொழிலதிபர்
66 வயதான மிகைல் வாட்ஃபோர்டு உக்ரைனில் ஆயில் மற்றும் கேஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். அதன் பிறகு இங்கிலாந்தில் ரியல் எஸ்டேட் தொழிலும் மிகைல் கொடி நாட்டினார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இவருக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதிர்ச்சி
கடந்த திங்கட் கிழமை அன்று சர்ரே பகுதியில் அமைந்துள்ள மிகைலின் பங்களாவிற்கு வேலை ஆட்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது கராஜை பணியாளர் ஒருவர் திறக்கும் போது அதனுள்ளே மிகைல் தூக்கில் தொங்கி இருக்கிறார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், மிகைலின் மரணத்தில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
போர் தான் காரணம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் கவலையில் இருந்த மிகைல் மன அழுத்தம் காரணமாகவே இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மிகைலின் குடும்ப நண்பர்,"அவர் இறந்த நேரமும் உக்ரைன் படையெடுப்பும் நிச்சயமாக தற்செயல் நிகழ்வு அல்ல. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட தொழிலதிபர்களின் பட்டியலில் அவருடைய பெயர் இல்லை. அவரது மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது. இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய குடிமக்கள் மற்றும் கூட்டாளிகள் சிலரின் சந்தேகத்திற்கிடமான மரணங்களுக்குப் பிறகு அவரது மரணம் நிகழ்ந்து இருக்கிறது" என்றார்.
மேலும், போர் துவங்கிய நாளில் இருந்தே மிகைல் கவலையில் இருந்ததாக சொல்லும் அவர் இப்படி ஒரு முடிவை அவர் எடுப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.
மிகைலின் மனைவி ஜேன் பேஸ்புக் பக்கத்த்தில்,' அவர் மிக அழகான வாழ்க்கையை வாழ்ந்தார். உலகின் மிகச்சிறந்த காதல் கதைகளில் அவருடையதும் ஒன்று" என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மற்ற செய்திகள்