Valimai BNS

யாரவது எங்கள காப்பாத்துங்க.. ரஷ்யாவுடன் போர் தொடங்கியுள்ள நிலையில் வேண்டுகோள் விடுத்த உக்ரைன்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன்: உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர், எங்கள் நாட்டை ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாரவது எங்கள காப்பாத்துங்க.. ரஷ்யாவுடன் போர் தொடங்கியுள்ள நிலையில் வேண்டுகோள் விடுத்த உக்ரைன்

தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவில் எந்த பொருட்களின் விலை உயர போகுது? நிபுணர்கள் எச்சரிக்கை

உக்ரைனில் எமெர்ஜென்சி:

ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உக்ரைனில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு நேடா படைகளும், அமெரிக்காவும் சப்போர்ட்டாக உள்ளது. ரஷ்யாவிற்கு பாகிஸ்தான் சீனா இலங்கை ஆப்கானிஸ்தான் என அத்தனை அண்டை நாடுகளும் ஆதரவாக உள்ளது.

ரஷ்ய படைகள் தாக்குதல்:

தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும்,  உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு போட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஜோ பைடன் ரஷ்யா மீது கடும் கண்டனம்:

உச்சக்கட்ட பதற்ற நிலையில் உக்ரைன் நாடு உள்ளது. அதோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Ukraine appeals to the world to save it from Russia

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்:

ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'தங்கள் நாட்டை ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும். ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். தூதரக ரீதியில் கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனை பாதுகாக்க உதவ வேண்டும்:

மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கையில், 'ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாடு இப்படி விதிகளை மீறி செயல்பட்டால், மற்ற நாடுகளும் இதனை பின்பற்ற நேரிடும். ஐநாவில் உறுப்பு நாடாக உள்ள அனைவரும் உக்ரைனை பாதுகாக்க உதவ வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்கும் உக்ரைனுக்கும் நடக்குற போர்ல யாராவது குறுக்க வந்தா.. வரலாறு காணாத அழிவ சந்திப்பாங்க.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கை

UKRAINE, RUSSIA, ரஷ்ய படைகள் தாக்குதல், ஜோ பைடன்

மற்ற செய்திகள்