'இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல...' பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்...! - ரஷ்யாவிற்கு 'கடும்' எச்சரிக்கை விடுத்த பிரிட்டன்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனை கைப்பற்ற நினைத்தால் ரஷ்யா கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது.

'இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல...' பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்...! - ரஷ்யாவிற்கு 'கடும்' எச்சரிக்கை விடுத்த பிரிட்டன்...!

உக்ரைன் நாட்டை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா அதன் எல்லைப் பகுதியில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த போக்கை எதிர்க்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதற்கு முன்பே உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.

ஆனால், ரஷ்யா இதை எதையுமே சட்டைசெய்ததாக தெரியவில்லை. இந்நிலையில் பிரிட்டனின் லிவர்பூல் நகரில் நடைபெற்ற G-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் ரஷ்யா உக்ரைன் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை குவித்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அப்போது பிரிட்டன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ரஷ்யாவின் இந்த போக்கை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், 'ரஷ்யா உக்ரைனை கைப்பற்ற முயன்றால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று எச்சரித்துள்ளார்.

மேலும், 'ரஷ்யாவிற்கு எதிராக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் ஒன்றிணைந்து. ரஷ்யா தனது நிலையில் இருந்து பின் வாங்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் எல்லையில் நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என அதன் எல்லைப்பகுதியில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்திருந்தாலும் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

UK, RUSSIA, UKRAINE, ரஷ்யா, உக்ரைன், பிரிட்டன்

மற்ற செய்திகள்