“ஏய் கொரோனா.. அப்படி ஓரமா போய் விளையாடு!”.. குணமான 99 வயது இரண்டாம் உலகப்போர் வீரர்! வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99 வயது இரண்டாம் உலகப்போர் வீரர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்தின் Doncaster எனும் பகுதியில் உள்ள Tickhill Road மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 99 வயதான ஆல்பர்ட் சேம்பர்ஸ். வரும் ஜூலை மாதத்துடன் தனது100-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிககப்பட்டிருந்த இவர் தற்போது கொரோனாவில் இருந்து போராடி மீண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப் போர் வீரரான இவர், தனது உடல் நலம் தேற உதவிய மருத்துவர்கள் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனாவில் இருந்து போராடி மீண்டு வந்த ஆல்பர்ட் சேம்பர்ஸை சிறப்பிக்கும் விதமாக மருத்துவமனை ஊழியர்களும் கைதட்டி
Some lovely news coming from Doncaster this evening.
Albert Chambers, who will be 100 in July, and a WW2 veteran, has fought off Coronavirus thanks to the help of the team at Tickhill Road Hospital, run by @rdash_nhs. Here he is getting a guard of honour from staff 💙 pic.twitter.com/INkBIuTJ5F
— NHS North East & Yorkshire (@NHSNEY) April 9, 2020
அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.