“வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்... இவர்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” - எச்சரிக்கும் பிரிட்டிஷ் மருத்துவ நிபுணர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் தற்போது உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

“வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்... இவர்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” - எச்சரிக்கும் பிரிட்டிஷ் மருத்துவ நிபுணர்!

ஏற்கனவே பரவிய வைரஸின் தன்மையை விட இதன் தன்மை 70 சதவீதம் வரை அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அந்நாடு மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல், இங்கிலாந்து அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மீண்டும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டிஷ் மருத்துவ நிபுணர் கிறிஸ் ஸ்மித், புதிய வைரஸ் பரவலில் இருந்து எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 'ஏற்கனவே கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கும் இந்த புதிய கொரோனா தொற்று வகை பரவ வாய்ப்புண்டு. இந்த கொடிய தொற்றிற்கான எதிர்ப்பு சக்தி என்பது மிக குறுகிய காலமே இருக்கக் கூடும் என்பதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும்' என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், 'ஏற்கனவே ஒருவரது உடலில் பல வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிலிருந்து உங்களுக்கு அதிக எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்கலாம். ஆனால், கொரோனா தொற்று உட்பட பல வைரஸ்களில் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறுகிய காலத்தை உடையதாக இருக்கும். எனக்கு தெரிந்து கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், அடுத்த 48 நாட்களுக்குள் மீண்டும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் வரை மக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவும், அரசு அறிவித்துள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் மிகவும் சரியாக கடைபிடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்' என மருத்துவ நிபுணர் கிறிஸ் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றின் காரணமாக இங்கிலாந்து நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்