'யாரோட உயிருக்கும் உத்தரவாதம் இல்ல... தப்பிச்சு ஓடிருங்க'!.. பீதியில் தாலிபான்கள் மற்றும் ராணுவ வீரர்கள்!.. போர்க்களமாக மாறும் காபூல்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் மட்டுமே பதற்றத்தில் இருந்த நிலையில், தற்போது தாலிபான்கள், ராணுவ வீரர்கள் என அனைவரையும் பீதியடையும் வகையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

'யாரோட உயிருக்கும் உத்தரவாதம் இல்ல... தப்பிச்சு ஓடிருங்க'!.. பீதியில் தாலிபான்கள் மற்றும் ராணுவ வீரர்கள்!.. போர்க்களமாக மாறும் காபூல்!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரப்பூர்வமாக ஆட்சி அமைக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவர்களின் கடுமையான சட்டங்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேற ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஆனால், காபூல் விமான நிலையத்தில் நிலைமை தலை கீழாக உள்ளது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், பலரை விமான நிலையத்துக்குள் கூட அனுமதிப்பதில்லை. மேலும், விமான நிலையம் பக்கம் வரக்கூடாது என தாலிபான்கள் ஆப்கன் மக்களை அச்சுறுத்துவதாகவும் செய்திகள் வருகின்றன.

இதற்கிடையே, காபூல் விமான நிலையத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கான காரணம் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தற்கொலை தாக்குதல்கள் நடத்தலாம் என உளவுத்துறையிடமிருந்து 'மிகவும் உறுதியான' தகவல் கிடைத்திருப்பதாக பிரிட்டன் ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் உடனடியாக தாக்குதல் நடத்தலாம் என மிகவும் நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு வரக்கூடாது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் மற்றும் அடுத்தடுத்து வரும் அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்க வேண்டும்.

விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக மேற்கத்திய நாடுகள் தாலிபான்களை நம்பியுள்ளதாகவும், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் ஏராளமான மக்கள் இன்னும் அங்கு காத்திருக்கின்றனர். அங்கு இருப்பவர்களைப் பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று ஹெப்பி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் முயற்சியில் காபூல் விமான நிலையத்தில் கூடியிருப்பவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் இந்த செய்தி, ஆப்கன் மக்களை மட்டுமின்றி பிற நாடுகளிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்