'இங்கிலாந்தில் பரபரப்பை கிளப்பியுள்ள பிரதமர் போரிஸின் ரகசிய திருமணம்'... '2 முறை விவாகரத்து'... கிளம்பியுள்ள புதிய சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு நிச்சயமான பெண் கேரி சைமண்ட்ஸை வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் மணந்து கொண்டார்.
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ் உடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்குக் கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் - ஹேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.
இவர்களது திருமணம் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள கதீட்ரலில் ரகசியமாக நடைபெற்றது. இதில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் திருமணத்தை, பிரதமர் அலுவலகமும் நேற்று காலை உறுதிப்படுத்தியது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் கூட வெளியாகிவிட்டது.
இந்நிலையில் இரண்டு முறை விவாகரத்து ஆன நபரான பிரதமர் போரிஸ் ஜோன்சனை தேவாலயத்தில் மறுமணம் செய்ய ஏன் அனுமதித்தீர்கள் என்று பாதிரியார்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரதமர் போரிஸ் இதற்கு முன்பு Allegra Mostyn-Owen என்பவரைத் திருமணம் செய்து அவருடன் ஆறு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அதே போன்று Marina Wheeler என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்து அவர்களை விவாகரத்து செய்த பின்னரே, இப்போது கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பொதுவாக விவாகரத்து செய்தவர்களின் முன்னாள் மனைவிகள் உயிருடன் இருந்தால் தேவாலயத்தில் மறுமணம் செய்யச் சட்டம் இல்லை. இதைமேற்கோள் காட்டி இரண்டு முறை விவாகரத்து பெற்ற போரிஸ் ஜோன்சன் வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதை விளக்க முடியுமா? என்று பாதிரியார் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே ஏற்கனவே இதுபோல விவாகரத்து செய்யப்பட்டவர்கள் தேவாலயத்தில் மறுமணம் செய்ய அனுமதியில்லை என்று நிராகரிக்கப்பட்டுள்ளதை அவர் பார்த்த நிலையில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
மற்ற செய்திகள்