கட்டுக்கடங்காத ‘வீரியமிக்க’ புதிய கொரோனா.. மறுபடியும் முழு ‘ஊரடங்கை’ அதிரடியாக அறிவித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. தற்போது அந்நாட்டில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு தினமும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனாலும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவி வருகிறது. ஒருபுறம் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் வைரஸ் பரவல் வேகமாக உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து மக்கள் பத்திரமாக தங்களது வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள போரிஸ் ஜான்சன், இந்த ஊரடங்கு புதிய வகை கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது கடந்த மார்ச் அமல்படுத்தப்பட்டிருந்ததைப் போல மிக கடுமையானதாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த ஊரடங்கு 6 வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனத் கூறப்படுகிறது. வரும் புதன் கிழமை முதல் பள்ளிகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்