தாத்தாவோட சுயசரிதையில் இருந்த பக்கங்கள்.. தமிழ்நாட்டை தேடிவந்த பிரிட்டன் நபர்.. மனதை நெகிழ வைத்த பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்தாத்தா எழுதிய புத்தகத்தில் இருந்த விஷயத்திற்காக இங்கிலாந்தில் இருந்து ஊட்டி வரை வந்த பேரன் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மனம் உருக வைத்து வருகிறது.
இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ குட்லேண்ட். இவருக்கு தற்போது 63 வயது ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் உலக வங்கியில் பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது.
முன்னதாக, இவரது தாத்தாவான ஸ்டான்லி குட்லேண்ட் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் காரணமாக தான் சமீபத்தில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் பகுதிக்கு வந்துள்ளார் ஆண்ட்ரூ.
அவரது தாத்தாவான ஸ்டான்லி குட்லேண்ட், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நடந்த போது ராணுவ அதிகாரியாக இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் முதலாம் உலக போரின் போது குன்னூரில் வெலிங்டன் பகுதியில் ஸ்டான்லி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில், அவருக்கு டைபாய்டு ஏற்படவே, அங்குள்ள ராணுவ மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
மேலும் ஸ்டான்லி எழுதிய சுயசரிதையில் வெலிங்டன் பகுதி குறித்து சிலாகித்து எழுதி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதில், வெலிங்டன் தனக்கு பிடித்தமான இடம் என்றும் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
இந்த நிலையில், ஸ்டான்லியின் பேரனான ஆண்ட்ரூ குட்லேண்ட், தனது தாத்தா ரசித்த இடத்தை நேரில் பார்க்க வேண்டும் என்றும் அவரது சுயசரிதையை படித்து விட்டு விருப்பம் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.அதன்படி, நீண்ட நாட்களாக குன்னூர் வர வேண்டும் என நினைத்திருந்த ஆண்ட்ரூ, ஒரு வழியாக சமீபத்தில் தாத்தா குறிப்பிட்ட இடத்தை காண நேரில் வந்துள்ளார். அவரது நண்பர் கிறிஸ்டோபர் என்பவரையும் தன்னுடன் அழைத்து வந்த ஆண்ட்ரூ குட்லேண்ட், குன்னூரின் வெலிங்டன் உள்ளிட்ட பல பகுதிகளை ரசித்து பார்த்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசும் ஆண்ட்ரூ, குன்னூர் மிக அழகாக இருந்ததாகவும், மக்களின் மனமும் அதை விட சிறப்பாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். தாத்தா தனது சுயசரிதையில் குறிப்பிட்ட இடம் குறித்து நேரில் பார்க்க, லண்டனில் இருந்து குன்னூர் பறந்து வந்த நபர் தொடர்பான செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்