"நான் 'ஆப்பிள்' பழம் தாங்க 'ஆர்டர்' பண்ணேன்.. உள்ள என்னங்க இவ்ளோ பெரிய 'ஷாக்' இருக்கு?!.." ஆர்டர் செய்த பையை திறந்ததும் காத்திருந்த இன்ப 'அதிர்ச்சி'!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டங்களில், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செயது வாங்கும் பழக்கம், மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதில், சில நேரம் தவறாக பொருட்கள் மாறி, குளறுபடியைக் கூட ஏற்படுத்தும்.
இந்நிலையில், ஆப்பிள் பழங்களை நபர் ஒருவர் ஆர்டர் செய்திருந்த நிலையில், தனக்கு கிடைத்த பையைத் திறந்து பார்த்தவருக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. லண்டன் அருகேயுள்ள ட்விக்கன்ஹாம் (Twickenham) என்னும் பகுதியிலுள்ள டெஸ்கோ (Tesco) பல்பொருள் அங்காடியில் ஆப்பிள் பழங்களை நிக் ஜேம்ஸ் (Nick James) என்பவர் ஆர்டர் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனக்கு கிடைத்த ஆப்பிள் பையைப் பெற்றுக் கொண்ட நிக் ஜேம்ஸ், அதனைத் திறந்து பார்த்துள்ளார். அதில், தான் ஆர்டர் செய்த ஆப்பிள் பழங்கள் மட்டுமில்லாமல், கூடவே மிகப்பெரிய பரிசு ஒன்றும் இருந்துள்ளது. புதிய வகை ஆப்பிள் ஐ போன் ஒன்று, அந்த பைக்குள் இருந்துள்ளது.
இதனைக் கண்டு திக்கு முக்காடிப் போன ஜேம்ஸ், முதலில் அந்த போன் தவறுதலாக தனக்குக் கிடைத்தது என நினைத்துள்ளார். ஆனால், அந்த போன் தவறுதலாக ஒன்றும் நிக் ஜேம்ஸிடம் வந்து சேரவில்லை. டெஸ்கோ நிறுவனம், கடந்த சில தினங்களாக, தனது நிறுவனத்தில் இருந்து பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையார்கள் சிலருக்கு, ஆப்பிள் ஐ போன், ஏர்போட்கள் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கி வருகிறது.
இதில், நிக் ஜேம்ஸ் வாங்கிய ஆப்பிள் பழத்திற்கும் அதிர்ஷ்ட பரிசு காத்திருந்துள்ளது. தனக்கு ஐ போன் கிடைத்து பற்றி ஆச்சரியத்துடன் கூறிய ஜேம்ஸ், 'எனக்கு ஏதோ ஆச்சர்யம் காத்திருக்கிறது என சொன்னதும், ஏதேனும் சாதாரண பரிசு இருக்கப் போகிறது என நான் முதலில் நினைத்தேன். ஆனால், அதில் ஐ போன் இருப்பதைக் கண்டு சற்று அதிர்ச்சியடைந்தேன்' என நிக் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் ஐ போன் ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலாக ஆப்பிள் குளிர்பானம் ஒன்று வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்