எங்க நாட்டுல 'ஒருத்தருக்கு' கூட 'கொரோனா' கிடையாது...! எப்படி நாங்க 'கண்ட்ரோல்' பண்ணினோம் தெரியுமா...? - கெத்து காட்டும் நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இங்கிலாந்தும் அதிலிருந்து தப்பவில்லை. அதோடு அந்நாட்டில் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளும் கடந்த ஆண்டு முடுக்கிவிடப்பட்டது.

எங்க நாட்டுல 'ஒருத்தருக்கு' கூட 'கொரோனா' கிடையாது...! எப்படி நாங்க 'கண்ட்ரோல்' பண்ணினோம் தெரியுமா...? - கெத்து காட்டும் நாடு...!

அதன்பின் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அங்குத் தீவிரப்படுத்தப்பட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் தடுப்பூசி பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

அதன் காரணமாக, பிரிட்டன் நாட்டில் கொரோனா பரவல் கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு, இங்கிலாந்தில் கடந்த திங்கள்கிழமை, முழுமையாக 24 மணி நேரத்திற்கு ஒரு நபருக்குக் கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

அதேபோல பிரிட்டனின் பிராந்தியங்களான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் ஒருவருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

UK last Monday, not a single person diagnosed with corona

பிரிட்டனின் முக்கிய பிராந்தியமான இங்கிலாந்தை தவிர பிற பிராந்தியங்களிலேயே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பொதுமக்களின் முயற்சிகள் மற்றும் தடுப்பூசி திட்டத்தின் காரணமாக, கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் இங்கிலாந்து ஏற்படவில்லை என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்