நீங்க மட்டும் 'உம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க... 'எடுத்துட்டு போய் பொளந்துருவோம்...' 'இதான் சரியான டைம்...' - நம்ம ஆளுங்க யாரும் அங்க இல்ல...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றியது. அதோடு, ராணுவ படைகளும் ஆப்கானை விட்டு கிளம்பின.
அமெரிக்க படைகள் ஆப்கானை விட்டு வெளியேற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அனுமதி அளித்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பயங்கர குண்டு வெடிப்பில் 169 ஆப்கானிஸ்தான் குடிமக்களும் 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் மரணம் அடைந்த நிகழ்வு உலகையே அச்சுறுத்தியது. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வெளியேறிய நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆப்கானிஸ்தானில் 2 ஆயிரம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் வசித்து வருவதாக தகவல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து பிரிட்டன் விமானப்படை தலைவர் மார்ஷல் மைக் விங்ஸ்டன் அமெரிக்காவிற்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதில், 'ஆப்கானிஸ்தானில் வசிக்கும் 2,000 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை மீது பிரிட்டன் விமானப்படை ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அமெரிக்க பென்டகன் ஒத்துழைத்தால் இந்த தாக்குதலை மேற்கொள்ள போரிஸ் ஜான்சன் அரசு தயாராக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தைரியமான முடிவு எடுக்க காரணம் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த யாரும் ஆப்கானிஸ்தானில் இல்லை. எனவே இரு நாடுகளின் வீரர்கள் பயங்கர தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்