மனசுக்குள் இருந்த ரகசியம்.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனைவி.. கேட்ட உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தெறித்து ஓடிய கணவன்
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: தூக்கத்தில் உளறுவது என்பது ஒருவரை சிறை வரை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்மில் பலருக்கு தூக்கத்தில் உளரும் பழக்கம் இருக்கலாம். ஆனால் நாம் சொல்ல கூடாததை சொல்லிவிட்டால் அவ்வளவு தான் நம் கதை முடிந்து விடும். மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருக்கும் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கும்.
பெரும்பாலும் தூக்கத்தில் உளறி மாட்டிக்கொள்ளும் சம்பவம் கணவன் மனைவி, நண்பர்களுக்குள் நடக்கும். நம் நம்பிக்கைக்கு உரியவர் மேல் வைத்திருக்கும் பிம்பம் ஒரு நொடியில் கலைந்து விடும். ஆனால் இங்கு வீட்டில் பணிபுரியும் பெண் ஒருவர் அருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவரிடம் உளறி மாட்டிக் கொண்டார்.
2010-இல் திருமண பந்தம்:
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டனி மற்றும் ரூத் ஃபோர்ட் ஆகியோருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பல மணி நேரமாக இசை குறித்து பேசியுள்ளனர். இருவரையும் இசை மீதான பேஷன் ஒன்றாக இணைத்து சில காலம் டேட்டிங் செய்த அவர்கள் 2010-இல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு உதவியாளராக பணி:
இந்த நிலையில் ரூத் ஒரு வீட்டில் வீல் சேர் உதவியோடு இயங்கி வரும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அதோடு ரூத் தான் வேலை செய்யும் இடத்திலிருந்து இந்திய ரூபாய் மதிப்பில் 7,31,032 ரூபாயை திருடியுள்ளார். இதனை தூக்கத்தில் உளறிய போது அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார் அவர் 61 வயது கணவர் ஆண்டனி. அதைக்கேட்டு தான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
போலீசில் புகார்:
அதோடு மட்டும் நின்றுவிடாமல் ரூத்தின் குற்ற செயலுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கில் போலீசில் புகார் கொடுத்ததாகவும் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தன்னுடைய மனைவி அதிகளவில் பணம் செலவிட்டு வருவதை கண்டு தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் 47 வயதான ரூத், தற்போது 16 மாத காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்