மார்க் & ஸ்பென்ஸரில் 'நைட் ஷிஃப்ட் வேலை'.. '1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பும்'.. 'கோடீஸ்வர பெண்ணின்' ஆச்சர்யமூட்டும் 'செயல்'!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் லாட்டரியில் பரிசு விழுந்து கோடீஸ்வரரான பின்னரும் பெண் ஒருவர் செய்துவரும் காரியம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
Ealaine Thompson என்கிற பெண் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் The Marks & Spencer நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணிவரை இவரது பணி நேரம் என்பதால், அந்த நேரத்தில் வேலைக்குச் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதற்கென நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பிச் செல்லும் Ealaineக்கு தற்போது 65 வயதாகிறது. ஆனால் இவர் இப்படியெல்லாம் நள்ளிரவில் இப்படி ஒரு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயமே இல்லை எனும் அளவுக்கு ஒரு சம்பவம் 1995 ஆம் ஆண்டு நடந்தது. ஆம், 1995-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Ealaine மற்றும் அவரது கணவர் Derek-க்கு 2.7 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது. இதனால் சாதாரண நிலையில் இருந்து Ealaine கோடீஸ்வரரானார்.
இதுபற்றி பேசிய Ealaine, “லாட்டரியில் பரிசு விழுந்தால் வேலைக்கு போகக் கூடாது என்றெல்லாம் இல்லை. நள்ளிரவு 1 மணிக்கு வேலைக்குக் கிளம்பும் நான் காலையில் 9 மணி வரையில் பணி செய்ய வேண்டும். ஆனால் நான் ஆஸ்துமா நோயாளி என்பதால், 8.30 மணிக்கெல்லாம் வீடு திரும்ப சிறப்பு சலுகை உண்டு. எவ்வளவு பணம் இருந்தாலும், நாம் உழைத்தால்தான் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாய் இருக்க முடியும். 65 வயதானாலும் ஓய்வு பெறத் தோன்றவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்