கொரோனா இறப்பில் ‘புதிய’ உச்சம்.. ஒரு நாள்ல மட்டும் இத்தனை பேரா..! விழி பிதுங்கி நிற்கும் நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் தினமும் உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டு இருப்பாதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதத்திற்கு பின் அதிக எண்ணிக்கையிலான இறப்பு நேற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கொரோனா வைரஸால் அதிக மரண எண்ணிக்கையை பதிவு செய்த நாடுகளில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்சிகோவுக்கு அடுத்து இங்கிலாந்து இடம் பெற்றுள்ளது.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி இங்கிலாந்தில் பதிவான கொரோனா இறப்பு எண்ணிக்கை வெறும் 65 என இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை மட்டும் 595 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது 14,196 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 1,219 பேர் செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50,000-க்கும் அதிகமானோர் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தாலும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இங்கிலாந்தில் கொரோனாவால் 65,200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக, இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்