"ஆச ஆசையா 'ஆர்டர்' பண்ணி,... பார்சல 'ஓப்பன்' பண்ணி பாத்தா..." அட என்னய்யா 'இது'ன்னு... அரண்டு போன 'தம்பதி'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில், தற்போதைய காலகட்டங்களில் மக்கள் கடைக்கு சென்று நேரத்தை அதிகம் செலவழிக்காமல் ஆன்லைன் மூலமே பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், கடந்த ஓராண்டாக உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா என்னும் கொடிய தொற்று கடுமையாக அச்சுறுத்தி வந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியாத நிலை இருந்ததால் ஆன்லைன் வணிகம் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஷாங்களின் (Shanklin) என்னும் பகுதியை சேர்ந்த மார்க் ஸ்மித் மற்றும் கெம்மா ஸ்மித் என்ற தம்பதி, கிறிஸ்துமஸை முன்னிட்டு சில அலங்கார பொருட்களை அமேசானில் ஆர்டர் செய்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த பார்சலை திறந்து பார்த்த கெம்மா, பீதியில் உறைந்து போயுள்ளார்.
காரணம், பார்சலை திறந்த போது அதற்குள் சுமார் 10 செ.மீ நீளமுள்ள சிலந்தி ஒன்று இருந்துள்ளது. உடனடியாக இது தொடர்பாக தனது கணவர் மார்க்கிற்கு தகவல் தெரிவித்த நிலையில், தனது வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக, மார்க் ஸ்மித் தனது பேஸ்புக் பக்கத்தில் சிலந்தி புகைப்படத்துடன் என்ன நடந்தது என்பதையும் விளக்கி பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு வரும் பொருட்களில் இது போன்ற உயிரினங்கள் இருப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதே போன்று பலமுறை நிகழ்ந்துள்ள நிலையில், அது தொடர்பான பதிவுகளையும், அனுபவங்களையும் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
மற்ற செய்திகள்