மாடுகளுக்கு மாஸ்க்.. இது கொரோனாவுக்காக இல்லயாம்.. மாடுகள்ல இப்படி ஒரு விஷயம் இருக்கா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, மாடுகளுக்கான மாஸ்க்கை தயாரித்துள்ளது. இதற்கான அவசியம் குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தான் பலரையும் அதிர வைத்திருக்கிறது. 

மாடுகளுக்கு மாஸ்க்.. இது கொரோனாவுக்காக இல்லயாம்.. மாடுகள்ல இப்படி ஒரு விஷயம் இருக்கா..!

Also Read |  பார்பி பொம்மை மாதிரி இருக்கணும்.. 50 லட்சத்துக்கு மேல செலவு.. "இவ்வளவு செஞ்சும் கடைசில இப்படி ஆகிடுச்சே".. புலம்பும் இளம்பெண்..!

மாடுகளுக்கு மாஸ்க்

கொரோனா வந்ததற்கு பிறகே மாஸ்க் என்ற பொருள் இருப்பதே பலருக்கும் தெரியவந்தது. கிருமியில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க்குகளை அணியும்படி உலக சுகாதார ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த Zelp என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் மாடுகளுக்கான மாஸ்க்கை கண்டுபிடித்துள்ளது. உலகை காப்பாற்ற இந்த கண்டுபிடிப்பு அவசியம் எனவும் கூறுகின்றனர் இந்த நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

UK company is making face masks for cows to help save the planet

என்ன காரணம்?

மாடுகள் ஏப்பம் விடும்போது அதிகளவில் மீத்தேன் எனப்படும் வாயுவை வெளியிடுகின்றன. இது புவியின் வெப்பநிலையை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் இந்த மீத்தேனை கட்டுப்படுத்தவே இந்த திட்டத்தை கையில் எடுத்தது Zelp நிறுவனம். இந்த மாஸ்க்கை அணிந்துகொண்டு மாடுகள் ஏப்பம் விடும்போது, நாசி துவாரங்கள் வழியாக வெளியேறும் 95 சதவீத மீத்தேனை இந்த மாஸ்க் உறிஞ்சிக்கொள்கிறது.

அதன் பின்னர் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடாகவும், நீராவியாகவும் மாற்றும் வேலையை மாஸ்க் செய்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய மாட்டு பண்ணைகளில் இது பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விருது

தற்போதைய சூழ்நிலையில் மாடுகள் வெளியிடும் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடாகவும் நீராவியாகவும் மாற்றும் திட்டம் 53 சதவீத துல்லியத்தை கொண்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டிற்குள் இதனை 60 சதவீதமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

UK company is making face masks for cows to help save the planet

இந்த ஆராய்ச்சிக்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற ராயல் காலேஜ் ஆர்ட்ஸ் அமைப்பு விருந்தளித்து கவுரவப்படுத்தியுள்ளது. மேலும், இளவரசர் சார்லஸ் இந்த கண்டுபிடிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

மாடுகளில் இருந்து வெளியேறும் மீத்தேனை கட்டுப்படுத்த இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று மாஸ்க் கண்டுபிடித்திருப்பது ஆராய்ச்சி துறையில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

UK, UK COMPANY, FACE MASKS, COWS, UK COMPANY MAKING FACE MASKS FOR COWS, PLANET

மற்ற செய்திகள்