கொரோனா வைரஸா? அப்படின்னா என்ன...? '11 மாசம் கழிச்சு மகனிடம் ஏற்பட்ட மாற்றம்...' - அதிர்ந்துப்போன பெற்றோர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஃப்ளேவில் (19).
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி ஏற்பட்ட வாகன விபத்தின் போது படுகாயமடைந்தார். தலையில் அடிபட்டு மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோமா நிலைக்குச் சென்றார். ஜோசப் ஃப்ளேவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அடுத்த ஒரு சில வாரங்களில் கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சையில் இருந்த ஜோசப்புக்கு இருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டது. இருந்தபோதிலும், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பெற்றோரால் மகனுடன் தங்கியிருக்க முடியவில்லை. அதனால், அடிக்கடி வீடியோகால் மூலம் மட்டுமே தங்கள் அன்பு மகனைப் பார்த்துள்ளனர்.
தொடர்ச்சியான 11 மாத சிகிச்சைக்குப் பிறகு ஜோசப்புக்கு சற்று நினைவு திரும்பத் தொடங்கியுள்ளது. கை, கால்களை அசைக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிக்கத் தொடங்கியுள்ளார். வீடியோக்கால் மூலம் மட்டுமே எட்டிப் பார்க்கும் பெற்றோர், கொரோனா வைரஸ் பற்றியும், ஊரடங்கு உத்தரவு குறித்தும் கூறிய போது அவருக்கு எதுவுமே தெரியவில்லை. தன் மகனுக்கு நடந்த எதுவுமே தெரியவில்லை என அதிர்ந்து போயினர்.
இந்த நிலையில், அவருக்கு மருத்துவர்களும், பெற்றோர்களும் கடந்த ஒரு வருட காலமாக என்ன நடந்தது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கூறத் தொடங்கியுள்ளனர்.
நடந்த அனைத்தும் ஜோசப் புரிந்துகொள்ள சிறிது காலம் பிடிக்கும் என்றே மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்