'இங்கிலாந்தில் வேகமாக பரவிவரும் அதிதீவிர வைரஸ்'... 'அச்சத்திற்கு இடையே'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழலில் நம்பிக்கை தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

'இங்கிலாந்தில் வேகமாக பரவிவரும் அதிதீவிர வைரஸ்'... 'அச்சத்திற்கு இடையே'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி!!!'...

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் அரசின் புள்ளிவிவரங்கள் படி 53,135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அங்கு இதுவரை 71,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் வேகமாக பரவிவரும் புதிய வகை அதிதீவிர கொரோனா வைரஸால் தலைநகர் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

UK Approves Oxford AstraZenecas Corona Vaccine Touts Moment Of Hope

இந்நிலையில் இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை தொடர்ந்து கோவிஷீல்டு எனும் பெயரில் ஆக்ஸ்போர்டு உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், திங்கள்கிழமை முதல் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி  வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. உருமாறிய புதிய வகை அதிதீவிர கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழலில் இரண்டாவது தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது பெரும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்